Showing posts with label இளையநிலா. Show all posts
Showing posts with label இளையநிலா. Show all posts

Sunday, 24 June 2007

ராஜா வீட்டு இளைய நிலா

இளைய நிலா பொழிகிறதே!

இசை: இசைஞானி இளையராஜா
வரிகள்: கவிஞர் வைரமுத்து
படம்: பயணங்கள் முடிவதில்லை
வருடம்: 1982
அசத்தலாகப் பாடியவர்: பாடும் அருவி - S.P.பாலசுப்பிரமணியம்

இந்தப் பாடலுக்கான சுட்டி இங்கே: இளைய நிலா பொழிகிறதே!
===============================================

இளைய நிலா பொழிகிறதே
இதயம் வரை நனைகிறதே
உலாப் போகும் மேகம் கனாக் காணுமே
விழாக் காணுமே வானமே!

(இளைய)

இளைய நிலா பொழிகிறதே
இதயம் வரை நனைகிறதே
வரும் வழியில் பனி மழையில்
பருவ நிலா தினம் நனையும்

முகிலெடுத்து முகம் துடைத்து
விடியும் வரை நடை பழகும்
வரும் வழியில் பனி மழையில்
பருவ நிலா தினம் நனையும்

முகிலெடுத்து முகம் துடைத்து
விடியும் வரை நடை பழகும்
வான வீதியில் மேக ஊர்வலம்
காணும் போதிலே ஆறுதல் தரும்
பருவ மகள் விழிகளிலே கனவு வரும்

(இளைய)

இளைய நிலா பொழிகிறதே
முகிலினங்கள் அலைகிறதே
முகவரிகள் தொலைந்தனவோ
முகவரிகள் தவறியதால்
அழுதிடுமோ அது மழையோ
முகிலினங்கள் அலைகிறதே

நீல வானிலே வெள்ளி ஓடைகள்
போடுகின்றதே என்ன ஜாடைகள்
விண்வெளியில் விதைத்தது யார் நவமணிகள்!

(இளைய)