Friday 16 January 2009

சொர்கமே என்றாலும் நம்ம ஊறப் போல வருமா???????


படம்: ஊரு விட்டு ஊரு வந்து
பாடல்: சொர்கமே என்றாலும் நம்ம ஊறப் போல வருமா
இசை: இளையராஜா(பாடியவரும் இந்த மாமேதையே.........)
பாடியவர்: ஜானகி அம்மா
வருடம்:1990


இந்தப் பாடலுக்கான சுட்டி இங்கே: சொர்கமே என்றாலும் நம்ம ஊறப் போல வருமா
====================================================
ஹேய் தந்தன தந்தன தந்தா
சொர்கமே என்றாலும்
அது நம் ஊரைப் போல வருமா?
அட என் நாடு என்றாலும்
அது நம் நாட்டுக் கீடா ஆகுமா?
பல தேசம் முழுதும் பேசும் மொழிகள்
தமிழ் போல் இனித்திடுமா?

(சொர்கமே..)

ஏரிக்கரை காத்தும் ஏலேலோ பாட்டும்
இங்கே ஏதும் கேட்கலையே
பாடும் குயில் சத்தம் ஆடும் மயில் நித்தம்
பார்க்க ஒரு சோலை இல்லையே
வெத்தலைய மடிச்சு மாமன் அதை கடிச்சி
துப்ப ஒரு வழியில்லையேஓடி வந்து குதிச்சு
முங்கி முங்கி குளிக்க அட ஒரு ஓடை இல்லயே
இது ஊரு என்ன ஊரு நம் ஊரு ரொம்ப மேல்
அட ஓடும் பல காரு வீண் ஆடம்பரம் பாரு
ஒரு தாகம் தீர்க்க அது மோரு

(சொர்கமே..)

மாடு கண்ணு மேய்க்க மேயிறதைப் பார்க்க
மந்தவெளி இங்கே இல்லையே
ஆடு புலி ஆட்டம் போட்டு விளையாட
அரசமரம் மேடை இல்லையே
காளை ரெண்டு பூட்டி கட்ட வண்டி ஓட்டி
கானம் பாட வழியில்லையே
தோழிகளை அணைச்சு சொல்லி சொல்லி ரசிச்சு
ஆட்டம் போட முடியலையே
ஒரு எந்திரத்தை போல அட இங்கு உள்ள வாழ்க்கை
இத எங்கே போயி சொல்ல மனம் இஷ்டப்படவில்லை
நம் ஊரை போல ஊரும் இல்லை

(சொர்கமே என்றாலும்..)
======================================================

Tuesday 26 June 2007

மஞ்சம் வர ஏன் நெஞ்சம் இல்லை?

மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ!

படம் : மெளன ராகம்
குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம்
வரிகள்: வாலி
இசை: இளையராஜா

பாடலுக்கான சுட்டி இங்கே! மன்றம் வந்த தென்றலுக்கு
--------------------------------------------------------
மன்றம் வந்த தென்றலுக்கு
மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ!
அன்பே என் அன்பே
தொட்டவுடன் சுட்டதென்ன
கட்டழகு வட்ட நிலவோ
கண்ணே என் கண்ணே
பூபாளமே கூடாதெனும்
வானம் உண்டோ சொல்!

(மன்றம்)

தாமரை மேலே நீர்த்துளி போல்
தலைவனும் தலைவியும் வாழ்வதென்ன
நண்பர்கள் போலே வாழ்வதற்கு
மாலையும் மேளமும் தேவையென்ன
சொந்தங்களே இல்லாமல்
பந்தபாசம் கொள்ளாமல்
பூவே உன் வாழ்க்கைதான் என்ன?.... சொல்!

(மன்றம்)

மேடையைப் போலே வாழ்க்கை அல்ல
நாடகம் ஆனதும் விலகிச் செல்ல
ஒடையைப் போலே உறவும் அல்ல
பாதைகள் மாறியே பயணம் செல்ல
விண்ணோடு தான் உலாவும்
வெள்ளி வண்ண நிலாவும்
என்னோடு நீ வந்தால் என்ன?....... வா!

(மன்றம்)
---------------------------------------------------------



Sunday 24 June 2007

ராஜா வீட்டு இளைய நிலா

இளைய நிலா பொழிகிறதே!

இசை: இசைஞானி இளையராஜா
வரிகள்: கவிஞர் வைரமுத்து
படம்: பயணங்கள் முடிவதில்லை
வருடம்: 1982
அசத்தலாகப் பாடியவர்: பாடும் அருவி - S.P.பாலசுப்பிரமணியம்

இந்தப் பாடலுக்கான சுட்டி இங்கே: இளைய நிலா பொழிகிறதே!
===============================================

இளைய நிலா பொழிகிறதே
இதயம் வரை நனைகிறதே
உலாப் போகும் மேகம் கனாக் காணுமே
விழாக் காணுமே வானமே!

(இளைய)

இளைய நிலா பொழிகிறதே
இதயம் வரை நனைகிறதே
வரும் வழியில் பனி மழையில்
பருவ நிலா தினம் நனையும்

முகிலெடுத்து முகம் துடைத்து
விடியும் வரை நடை பழகும்
வரும் வழியில் பனி மழையில்
பருவ நிலா தினம் நனையும்

முகிலெடுத்து முகம் துடைத்து
விடியும் வரை நடை பழகும்
வான வீதியில் மேக ஊர்வலம்
காணும் போதிலே ஆறுதல் தரும்
பருவ மகள் விழிகளிலே கனவு வரும்

(இளைய)

இளைய நிலா பொழிகிறதே
முகிலினங்கள் அலைகிறதே
முகவரிகள் தொலைந்தனவோ
முகவரிகள் தவறியதால்
அழுதிடுமோ அது மழையோ
முகிலினங்கள் அலைகிறதே

நீல வானிலே வெள்ளி ஓடைகள்
போடுகின்றதே என்ன ஜாடைகள்
விண்வெளியில் விதைத்தது யார் நவமணிகள்!

(இளைய)

முதல் வணக்கம்!

தமிழில் எழுதும் ஒரு சிறு முயற்சி!
சின்னாவின் (அட, அதாங்க என் பெயர்) தமிழில் சிறு சிறு பிழைகள் இருக்கும்.
பொறுத்துக்கொள்வது உங்கள் பணி.
நடைவண்டியில் இருந்து நடக்கும் வயதிற்கு வந்து விட்டேன்.
ஓடிக்காட்ட காலம் உண்டு!
கணபதியை வணங்கிவிட்டு, என் கணக்கைத் துவங்குகிறேன்!
என்றென்றும் அன்புடன்
சின்னா
(அட, சின்னவன், அதானால் என் பெயரும் சின்னா)